புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறு: ஒருவர் காயம்

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறு: ஒருவர் காயம்
X

பைல் படம்.

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி. புழல் மத்திய பெண்கள் சிறையில். பல்வேறு குற்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் சிறையில் உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அனினி மோனிகா (Anyini Monica) தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ககோஸ் ஸ்டெல்லா, கெடிட்ல்வாஸ்ர் லிசி (Kakoze Stella, Keditlwasr Lizzie ) ஆகியோர் உள்பட வெளுநாட்டு கைதிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.

இதில் கெடிட்ல்வாஸ்ர் லிசியின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறை பெண் காவலர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து காயமடைந்த லிஸியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்கள் சிறையில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story