தனியார் நிறுவனத்தில் 10 ஊழியர்களை பணி நீக்கம்: சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் நிறுவனத்தில் 10 ஊழியர்களை பணி நீக்கம்:  சிஐடியு  கண்டன ஆர்ப்பாட்டம்
X

 சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாமரைப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 10 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த வேப்பம்பட்டில் பிலிப்கார்ட் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தாமரைப்பாக்கம், வேப்பம்பட்டு, வெங்கல், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 10 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து சி ஐ டி யு சார்பில் ஊத்துக்கோட்டை வட்டார செயலாளர் பாலாஜி தலைமையில் தாமரைப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50.க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தனியார் நிறுவனத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அதேபோல் ஊதிய உயர்வு உயர்த்தி வழங்க வேண்டியும், பத்து தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.

இதில் சி ஐ டி யு மாநில துணைத்தலைவர் விஜயன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ஏ ஜி கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!