செல்வியம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா

செல்வியம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா
X

செல்வியம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

திருவள்ளூர் அருகே ஸ்ரீ செல்வியம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழாவில், காப்பு கட்டி பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் அருகே ஸ்ரீ செல்வியம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த பட்டறை பெருமந்தூர் மஞ்சக்குப்பம் பகுதியில் ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற ஸ்ரீ செல்வியம்மன் திருக்கோவிலின் 36 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவானது வெகு விமரிசையான முறையில் நடைபெற்றது.


இத்திருக்கோவிலில் தீ மிதிப்பதற்காக 150 க்கு மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தும் 10 நாட்கள் அம்மன் வீதி ஊர்வல நடைபெற்று வந்த நிலையில். 11-வது நாளான்று நேற்று மாலை வண்ணம் மின்னும் வான வேடிக்கைகளை வானில் வெடிக்கப்பட்டு பக்தர்களான குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை அம்மன் பெயரை உச்சரித்தபடியே ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.


இத்திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு ரசித்த பின்பு அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!