திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
X

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது

இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவில் நான்கு நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

Tags

Next Story
ai as the future