பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய 7வது ஆடித்திருவிழாவில் குவிந்த பக்தர்கள்

பெரிய பாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குவிந்த பக்தர்கள்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் 7வது ஆடி திருவிழாவை முன்னிட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற சுயம்புவாக எழுந்தருளிய ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி மாதம் ஆடித்திருவிழா 14.வார காலம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தற்போது ஆடித்திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று ஏழாவது வாரத்தை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தமிழக மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமை பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் பெரியபாளையம் வந்து கோவில் சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் வாடகைக்கு எடுத்து தங்கி ஞாயிற்றுக்கிழமை மொட்டை அடித்தும், ஆடு, கோழி என பலியிட்டும், ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பொங்கலிட்டு உடல் முழுவதும் வேப்ப இலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி ஆலயத்தை சுற்றி வளம் வந்தும், ஆலய கோபுரம் எதிர்புறத்தில் உள்ள சக்தி மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றியும். இலவச தரிசனம் மற்றும்100 ரூபாய் க்யூ வரிசையில் காத்திருந்து நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்கள் வந்த வாகனங்களால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. எவ்வித அசம்பாவிதம் பெறாத வண்ணம் பெரியபாளையம் ஆலயம், மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு பணியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆலய நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சனிக்கிழமை பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில் புகழ்பெற்ற பவானி அம்மன் ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்தோம். மழை பெய்து வருவதால் சரியாக அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் தாங்குவதற்கு ஆலயத்தின் சார்பில் இலவச தங்கும் விடுதிகள் இல்லாத காரணத்தினால் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்பட்டதாகவும், எனவே பக்தர்கள் நலன் கருதி இலவச பக்தர்கள் தங்கும் விடுதிகளை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu