ஆடி முதல் நாள்: பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் குவிந்த பக்தர்கள்
பவானி அம்மன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுழம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் ஆடி மாதம் தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விழுப்புரம், திருவண்ணாமலை தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இன்று ஆடி மாதம் முதல் நாள் என்பதால் இன்று ஆடி முதல் நாள் என்பதால் அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் மற்றும் சிகப்பு ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை ஏந்தி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து ஆலய வளாகத்தில் உள்ள புற்றுப் கோவிலில் பாலை ஊற்றி, சக்தி மண்டபம் எதிரி நெய் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றி கோவில் சுற்றி வலம் வந்து அம்மனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu