பெரியபாளையம் அருகே சாய்பாபா கோவில் குரு பௌர்ணமி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

பெரியபாளையம் அருகே சாய்பாபா கோவில் குரு பௌர்ணமி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

பெரியபாளையம் ஷீரடி சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமியையொட்டி பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர்.

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குரு பௌர்ணமியை முன்னிட்டு பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஆரணி இடையே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா திருக்கோவிலில் குரு பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணிக்கு காக்கடாரத்தி, தொடர்ந்து பக்தர்கள் கைகளால் மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம், 7மணி அளவில் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், ஒன்பது மணி அளவில் சத்ய நாராயண பூஜை அதனைத் தொடர்ந்து பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


12 மணி அளவில் பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மத்தியான ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவின் பஜனை பாடல்களை பாடினர். இதனையடுத்து பாபாவிற்கு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6:00 மணி அளவில் தூபா ஆரத்தி, உற்சவர் பாபாவை சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து கோவில் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவசாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story