சிறுவாபுரி கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
சிறுவாபுரி முருகன் கோவில்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பொன்னேரி, செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சுற்றி உள்ள பகுதிகள் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்தி கடனை செலுத்தி செல்கின்றனர்.
இக்கோவிலில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரூபாய் 1.கோடி மதிப்பீட்டில் ஆலய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் வெகு வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இத்தகப் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் வெளியூரிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நாட்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அதிகரித்து வண்ணமே உள்ளது.
இக்கோவிலில் ரியல் எஸ்டேட், குழந்தை பாக்கியம், திருமணம் தடை நீங்க, வீடு கட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கோவிலில் நெய் தீபம் ஏற்றி கோவிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தால் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஆசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் ஆரணியில் இருந்து செங்குன்றம் செல்லும் சிறுவாபுரி சாலையில் கோவில் சுற்றி உள்ள நடைபாத வியாபாரிகள் கோவில் முன்பு சாலையை ஆக்கிரமித்து தேங்காய், பூமாலை கடைகள் நடத்தி வருவதால் பக்தர்கள் வாகனங்கள் மற்றும் இவ்வழியாக தினந்தோறும் செல்லும் பேருந்துகள் கடக்க மிகவும் கடினமாகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த கோவில் தரப்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரியிடம் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலுக்கு பக்தர்கள் நின்று ஏதுவாக தரிசனம் செய்ய சரியான முறையில் வசதிகளும் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூர அளவில் சாலையில் வரிசையில் நின்று மணி கணக்கில் வெயிலில் நின்று தரிசனம் செய்து செல்லும் நிலையும் உருவாகி உள்ளது.
இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியோர்கள் ஏதுவாக தரிசனம் செய்ய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாபாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார் அதில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இல்லாமல் கடைகளை நடத்த வேண்டும் தெரிவித்தார்.
இதனை மீறி வியாபாரிகள் சாலை இரு புறம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவதால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடப்பாதை கடைகளை அப்புறப்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு போதிய இடம் ஒதுக்கீடு செய்து. சாலையை விரிவு படுத்தி. பக்தர்களுக்கு ஏதுவாக சாமி தரிசனம் செய்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தின் சார்பிலும், பக்தர்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறுவதாக இதனால் சுவாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தி செல்வதாகவும். இத்தகை பிரசித்தி பெற்ற கோவிலுக்கு போக்குவரத்து வசதியும் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியும். கிலோமீட்டர் கணக்கில் வெயிலில் மழையில் நின்று மணிக்கணக்கில் தரிசனம் செய்வதாகவும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்படுவதாகவும் பக்தர்கள் தங்குவதற்கு காத்திருப்பு அரை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu