திருவள்ளூர்; கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ( மாதிரி படம்)
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்சா கூட்டமைப்பு ஒட்சா ஊராட்சி பணியாளர் சங்கம் சார்பாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் சுகாதார ஊக்குனர்கள் தூய்மை காவலர்கள் VPRC கணக்காளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் வாழ்வாதார 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளில் 536 சுகாதார ஊக்குனர்கள் பணியாற்றுகின்றனர் அவர்களுக்கு இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சென்னை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் 04.01.2024 இன் படி நிலக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க சுகாதார உறுப்பினர்களை ஈடுபடுத்தப்படுகிறது இதற்கு மாத தொகுப்பு புதியதாக ரூபாய் 2000 வழங்க ஆணையம் பிறப்பித்துள்ளது. கடந்த ஐந்து மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனவே காலதாமதம் இன்றி உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தொடர்ந்து கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்த சுகாதார ஊக்குனர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊக்குத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு டிஏ மற்றும் ஜி ஓ 14 படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் தாமதமாக ஊதியம் வழங்கும் ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் வேலை பளு அதிகமாக உள்ளது.
ஆகையால் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திருமதி யுவராணி நிறுவன தலைவர் ஓட் சா கூட்டமைப்பு எம் அமுல்ராஜ் மாநில தலைவர் கே. லட்சுமணன் மாநில ஒருங்கிணைப்பாளர் தனி தேவி மாவட்ட பொருளாளர் அமுதா மாவட்ட செயலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் இந்திரா மாநில பொருளாளர் ஜி கிரிஷா மாநில செயலாளர் செல்வராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் சுகாதார ஊக்குநர் பிரிவு காஞ்சிபுரம் ஆர். எஸ். சத்யா மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu