திருவள்ளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (மாதிரி படம்)
12 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி டிட்டோ ஜாக் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசுப் பள்ளிகளை மூடுகிற சித்தாந்தத்தில் இந்த சட்டத்தை தமிழ்நா்டு அரசு அமுல்படுத்தியிருப்பதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் குற்றம் சாட்டினார்.
திருவள்ளூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோ ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் கலந்து கொண்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண்- 243 -ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிக்டோ ஜாக்டோ உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த 12 கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அரசுப் பள்ளிகளை மூடுகிற சித்தாந்தத்தில் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை அமுல்படுத்தியிருப்பதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் குற்றம் சாட்டினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ம் தேதி சென்னையில் மாநில, மாவட்ட வட்டார, நிர்வாகிகள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu