வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

தாசில்தார் மீது நடவடிக்கை கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லாமல் ஆவடி விளிஞ்சியம்பாக்கம், எண் 5 பாரதிதாசன் நகர் வீடுகள் கடைகள் இடித்து மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில துணைச் செயலாளர் கங்காதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தலைமையில் ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட விளிஞ்சி பாக்கம் எண் 5 பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்கள் 172 குடும்பங்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றன. 1960இல் வேட்டைக்காரன் பழங்குடி மக்களுக்கு காலம் சென்ற முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள் இந்நிலையில்.ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை தெரு விளக்கு அமைக்கப்பட்டு மற்றும் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு பகுதியாக விளிஞ்சிப்பாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 12 2020ல் விளிஞ்சம்பாக்கம் ஏரி நீர்வரத்து சுருங்கி உள்ளது, என்று பத்திரிகை செய்தியை வைத்து தானாக முன்வந்து நீர் போக்குவரத்து சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி நீதிமன்றமும் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அடங்கிய குறிப்பிட்ட இந்த வீடு, கடைகள் இடிக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில்.ஆவடி வட்டாட்சியர் 10 12 2023 அன்று ஆவடி துணை வட்டாட்சியர் தலைமையில் ஜேசிபி இயந்திரங்களுடன் பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் துணையுடன் பட்டாவில் வீடு கட்டி உள்ள வீடுகள், கடைகள் இடித்து தரை மட்டும் ஆக்கியுள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பாடுபட்டு கட்டிய வீடுகள் கடைகள் எந்தவிதமான உத்தரவு இல்லாமல் இடித்து தள்ளிய ஆவடி வட்டாட்சியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இடித்த வீடுகள் கடைகள் மாவட்ட நிர்வாகமே கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்ரவர்த்தி, வியாழ வந்தான், வேந்தன், சுகுமார், ஏழுமலை, டெல்லி, கணேஷ் பாபு, ராஜேஸ்வரி, சிவ சாந்தி, ரகு மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu