அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
X

திருவள்ளுர் உழவர் சந்தை அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது போலீஸாரிடம் நடந்த வாக்குவாதம்

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியமாணவர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அரியலூர் அனிதாவின் நினைவு நாளை ஒட்டி நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அனிதாவின் நினைவு நாளையொட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான தீர்மானத்தை மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும், புதிய கல்விக் கொள்கைகளை அனுமதிக்கக்கூடாது, பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளுர் உழவர் சந்தை அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக காத்திருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால், காவல் துறையினருக்கும் தேசிய மாணவர் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அனுமதி அளித்ததை தொடர்ந்து, அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, இந்திய மாணவர் சங்க மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக, திருவள்ளுவர் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் நடந்துகொண்டதாக சங்க மாவட்ட செயலாளர் புகார் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாண் சூழல் காணப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்