இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

இந்தி திணிப்பை எதிர்த்து திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் இந்தி திணிப்பு எதிர்த்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மற்றும் நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அறிவிப்பையும் எதிர்த்து நடை பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கண திமுக இளைஞரணியினர் மற்றும் மாணவரணியினர், அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

தமிழகம் முழுவதும் திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்ற நிலையில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடை பெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேலான திமுக இளைஞரணியினரும், மாணவரணியினரும் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வழிகள் திணிக்க பார்க்கிறது. மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது. மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை திணிக்க கூடாது. பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும். இந்தி திணிப்பை என் நாளும் ஏற்க மாட்டோம், உணர்வுமிக்க தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்ற முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் இதனால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியாது. தற்பொழுது மத்திய அரசு புதிய கல்வி கொள்கை மூலம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பயன்படாத பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . இதுவும் தமிழக மக்களுக்கு எதிரான செயல் ஆகும். எனவே தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என கூறினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணை செயலாலர் ஜெரால்டு, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு, வெற்றி உள்ளிட்ட இளைஞரணி,மாணவரனி நிர்வாகிகள், திமுக நகர நிர்வாகிகள், நகரமன்ற தலைவர், துணை தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், இளைஞரணியினர், மாணவரணியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil