பயிற்சி மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதால் அதிக அளவில் பச்சிளம்குழந்தைகள் இறப்பதாக குற்றச்சாட்டு
Delivery Performed By Trained Doctors Allegation
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பயிற்சிமருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதினால்
அதிக அளவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம்,கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டபேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரூன், இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவரது மகள் கதீஜா வயது 19 இவரது மருமகன் ஹாசிம்,ஹாரூன் இவரது மகளுக்கு முதல் பிரசவம் என்பதால் அதே பகுதியில் உள்ள பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் கதீஜாக்கு சிகிச்சை அளித்த வந்து மருத்துவர் வயிற்றில் உள்ள குழந்தையானது நல்ல ஆரோக்கியமாக உள்ளதாகவும் சுகப்பிரசவம் நடைபெறும் என அங்குள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர்,இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டதால் பேரம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Delivery Performed By Trained Doctors Allegation
அங்கு கதீஜாவை பரிசோதனை செய்த மருத்துவர் அதிக அளவில் ரத்த கொதிப்பு உள்ளதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவரும் ரத்த கொதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும் என உறுதி அளித்துள்ளார்.ஆனால் அதன் பின்னர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் தாயின் வயிற்றில் உள்ள குழந்தை ரத்தம் குடித்து இறந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் இதனையடுத்து இரண்டரை கிலோ எடையுள்ள அழகானஆண் குழந்தை என தெரிய வந்தது.
இதுகுறித்து பெண்ணின் தாய் மற்றும் தந்தை ஹாரூன் கூறும் போது திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அப்போது பணியில் இருந்த பயிற்சி செவிலியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் மொபைல் போன் மூலம் பிரியாணி ஆர்டர் பண்ணலாம் ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணலாம் என ஒரு விளையாட்டுத்தனமாக அலட்சியத்துடன் செயல்பட்டு வந்த அலட்சியப் போக்கால் என் மகளின் வயிற்றில் உள்ள அழகான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறும் போது இனி பிரசவங்கள் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு உயர்சார்பு தீவிர சிகிச்சை மையத்தில் பார்க்கப்படும் எனவும் இனி சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என பேட்டி அளித்து இருந்த நிலையில் அன்று இரவே இது போன்ற சம்பவம் நடைபெற்றது மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu