தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சிமெண்ட் சாலை

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சிமெண்ட் சாலை
X

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.எல்லாபுரம் ஒன்றிய குழு 18-வது வார்டு உறுப்பினர் ஜி.சரவணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.மேலும், இப்பகுதியில்,ரூ.7 லட்சம் செலவில் டாக்டர் அம்பேத்கார் நினைவு நுழைவாயில் ஒன்றினை ஒன்றிய குழு உறுப்பினர் தனது சொந்த நிதியில் அமைத்துக்கொடுத்தார்.

இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிகளுக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி)செயலாளரும்,எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினருமான ஜி.சரவணன் தலைமை தாங்கினார்.பகுஜன் சமாஜ் கட்சியின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் லிட்டில்,5-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ்,அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில செயலாளர் வேதாரண்யம் மோகன்குமார்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பிரேம் ஆகியோர் கலந்து கொண்டு சிமெண்ட் சாலை மற்றும் நுழைவுவாயிலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினர். இதன் பின்னர்,பேண்ட்-வாத்தியம் முழங்க வானவேடிக்கையுடன் பெருமாள் கோவில் வரையில் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.ஜி,சரவணனின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக மெகா சைஸ் கேக் வெட்டி அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.

இதன் பின்னர்,கிராம மக்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தாமரைப்பாக்கம் பாஸ்கர், பூவை நகர அ.தி.மு.க. நிர்வாகிகள்,பல்வேறு அரசியல் கட்சியைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,கிராமப் பெரியோர்கள்,பொதுமக்கள், சுயஉதவி குழு பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in healthcare abstract