சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து; வெளியில் நின்றபடி தரிசனம் செய்த மக்கள்

சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து; வெளியில் நின்றபடி தரிசனம் செய்த மக்கள்
X

சிறுவாபுரி முருகன் கோயிலில் வரிசையில் நின்று வெளியிலேயே தரிசனம் செய்த மக்கள். 

சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் வெளியில் மக்கள் நின்றபடியே தரிசித்துச் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாபுரியில் பாலசுப்பிரமணியர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் அளிக்க தடை விதித்தது.

இதனால், இன்று செவ்வாய்க்கிழமை கோயில் மூடப்பட்டிருந்தாலும் வெளியிலே ஏராளமான பக்தர்கள் கோபுரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

மேலும் கூட்ட நெரிசலை தடுக்க ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!