பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டி! அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

பழுதடைந்த  குடிநீர் தேக்க தொட்டி! அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
X

ஆபத்தான நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டி தூண்

பெரியபாளையம் பேருந்து நிலையத்திலுள்ள குடிநீர் தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை அகற்றிவிட்டு புதியதாக கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை.

பெரிய பாளையத்தில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை ஆபத்து விளைவிக்கும் முன்பே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆரணி ஆற்றங்கரை ஒட்டி புகழ்பெற்ற சுழம்பு எழுந்தருளி பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் பெரியபாளையம் பேருந்து நிலையம் பின்புறம் 1984 ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, காலை, மாலை இரு வேலைகளில் பஜார் பகுதியில் வசிக்கும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த குடிநீர் தொட்டியில் இருந்து குடி தண்ணீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இந்த குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியானது கட்டி சுமார் 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொட்டியின் அனைத்து தூண்கள் மற்றும் மேல் தளம் மிகவும் பலவீனமடைந்து தொட்டியின் பல்வேறு பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி காணப்படுகிறது. இதனை சீர் செய்ய கடந்த 2014-15 ஆம் ஆண்டு ரூபாய் 94 ஆயிரம் செலவில் சீர் செய்த பின்னர் மீண்டும் தற்போது அதே நிலைமையில் தொட்டி காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பஜார் பகுதியில் உள்ள தெருக்களில் சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் தங்களுக்கு இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து நாள்தோறும் குடி தண்ணீர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தொட்டி மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பேருந்து பேருந்து நிலையம் குடியிருப்புகளும் உள்ளது என்றும் இதனால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்றும். எந்த நேரத்திலும் இந்த தொட்டியானது சரிந்து முறிந்து கீழே விழுந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் இப்பகுதியில் வாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும். சம்பந்தப்பட்ட எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே உடனடியாக இந்த பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்கள் நலனை கருதி தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வியும் எழுந்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்