கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஊத்துக்கோட்டை அருகே விவேகானந்தா விஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற சைபர் கிரைம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். 

ஊத்துக்கோட்டை அருகே அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று பேசினார்.

ஊத்துக்கோட்டை அருகே விவேகானந்தா விஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற சைபர் கிரைம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூரியில் அமைந்துள்ள விவேகானந்தா விஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 10 மற்றும் 12.ஆம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா விஷன் பள்ளியின் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

விவேகானந்தா விஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணைத் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ர.ராஜேஷ், கல்லூரி செயலாளர் ரா.அவந்திகா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் என்.லீலா அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் கலந்துகொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது மற்றும் குற்றங்கள் நடக்காதவாறு தடுப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 10,11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற தடகளம், ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட போட்டிகளை வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார் வணங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கணித படத்தை தேர்ந்தெடுத்தாள் நிச்சயமாக வேலை கிடைக்கும் கணிதம் கற்றுக் கொள்ள விரும்புவது சிறப்பான ஒன்றாகும் அமெரிக்கா உள்ளீட்டு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேலை கிடைப்பதற்கு அது அமையும் என தெரிவித்தவர் காவல்துறையில் பட்டதாரிகள் சேர்க்கை அதிகரிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!