சோழவரம் அருகே கண்டெய்னர் லாரி மோதி மாடுகள் உயிரிழப்பு
உயிரிழந்த மாடு.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காரனேடை பகுதியில் கே.பி. கே திருமண மண்டபம் அருகில் மிக வேகமாக வந்த லாரி ஒன்று சாலையில் படுத்திருந்த நான்கு மாடுகளின் மீது ஏறி இறங்கியது.
காரனோடை கிராமத்தில் வசிக்கும் ஜானகி அம்மாள் (60) என்ற மூதாட்டி வளர்த்து வரும் பசுமாடுகள் மழை காரணமாக ஈர நில பகுதியில் இருந்து சூடாக உள்ள சாலையில் வந்து படுத்துக் கொண்டு இருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினி கண்டெய்னர்லாரி மோதியதில் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அப்பகுதி மக்கள் கூடி லாரி ஓட்டுநரை மடக்கி பிடித்து சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த மூதாட்டி ஜானகியம்மாள் குழந்தைகள் போல் தான் வளர்த்து வந்த பசுமாடுகளை கண்டு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் கூறும்போது, சாலை முழுவதும் இருளாக இருந்ததால் தனக்கு மாடுகள் படுத்து இருந்தது தெரியவில்லை என்று கூறியுள்ளார். எந்நேரமும் பொதுமக்கள் நடமாடும் பரபரப்பான சாலையில் மின் விளக்குகள் இல்லாமல் இருளாக இருப்பதால் இதுபோல இன்னும் பல விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu