திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் பாதிப்பு 967 பேருக்கு கொரோனா, 32 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் தொற்று பாதிப்பு குறைந்தும், டிஸ்சார்ஜ் அதிகமாகியும் வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, 967 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் மொத்த தொற்று 98,445 ஆக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் 2079 நபர்கள் குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 86,747 நபர்கள் குணமடைந்துள்ளனர்
இன்று 32 நபர்கள் உயிரிழந்து இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1322 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 10,376 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu