திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
X

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வௌிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கணக்கு காட்டாமல் பணிகள் செய்வதில் ஒத்துழைக்காததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி முறையாக கணக்கு காட்டி நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி வார்டுகளில் பணி செய்ய ஒத்துழைக்காததால் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் சரஸ்வதி, குணசேகரன், தென்னவன் உள்ளிட்ட ஏழு திமுக கவுன்சிலர்களும் அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் அம்மணி மகேந்திரன், பா.ம.க. மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், உள்ளிட்ட 11 மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி மீது தி.மு.க. பெண் மாவட்ட கவுன்சிலர்கள் அமைச்சர் ஆர் காந்தியிடம் நேரில் மனு அளித்தனர். தமிழக முதலமைச்சர் திருவள்ளூரில் உள்ள தி.மு.க .ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்தபோது புகாரை அளித்தனர்.

அப்போது அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஆர்.காந்தி ஆவேசம் அடைந்து நமக்குள் ஆயிரம் சண்டை போடலாம்சொல்றதை கேட்டுக்கோ என எச்சரித்து மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பது இரண்டு நிமிடத்தில் முதலமைச்சர் வசம் சென்று சேர்ந்து விடும் ஒழுங்காக நடந்துக்கோங்க என திருவள்ளூர் எம் எல் ஏ., வி ஜி ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் எச்சரித்தார். அவர்களிடம் இது கட்சி. இங்கு கட்சி தான் முக்கியம் அதிமுகவிடம் சேர்ந்து கொண்டு எதையும் செய்யாதீர்கள் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தாதீர்கள் என்று கோபமாக கூறினார்.

மாவட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி மீது திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள ஆர் காந்தியிடம் புகார் அளிப்பதை அறிந்து முன்னதாகவே மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி அமைச்சர் ஆய்வு செய்த பங்கேற்க வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தற்போது மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Tags

Next Story
ai and future cities