திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலோடு வந்த கொரோனா நோயாளி

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலோடு வந்த கொரோனா நோயாளி
X

ஆட்டோவில் மூச்சுத்திணறலோடு உட்கார்ந்திருக்கும் நோயாளி.

திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலோடு அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்காததால் அவதியடைந்தார்.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலோடு அழைத்து வந்த கொரோனா நோயாளியை அரை மணி நேரமாக சிகிச்சைக்கு அனுமதிக்காததால் அவர் மூச்சுத்தி திணறலோடு அவதிப்பட்டார். கொரோனா தொற்று பாதிப்பில் 4வது இடத்திலும் உயிரிழப்பு நிலையில் 3-வது இடத்திலும் திருவள்ளூர் மாவட்டம் உள்ளதால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட சுகாதாரத் துறையும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறலோடு ஆட்டோவில் ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால், நோயாளியுடன் வந்த உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதற்குள் நோயாளி மூச்சுத்திணறலால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். ஆட்டோவில் அமர்ந்து அவதிப்படும் காட்சி அங்கிருந்தோரிடம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அரை மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் வந்து நோயாளியை paarkaadhadhaal நிலையில் நோயாளியின் உறவினர்களே அரை மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. தமிழகத்திலேயே தொற்று அதிகமாக மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 பேர் வரை தொற்று பாதிப்புக்குள்ளாகும் நிலையில் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள 200 படுக்கையும் நிரம்பியுள்ளதால் சிகிச்சைக்காக அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தலைமை அரசு மருத்துவமனையிலோ அல்லது தலைநகரின் அருகில் வேறு எங்கேனும் ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகளை அதிக அளவில் ஏற்படுத்தினால் மட்டுமே உயிர் இழப்பை குறைக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்