செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!
X

செவ்வாப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தபோது.

செவ்வாப்பேட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு ஏற்பாட்டில் கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய் பதிவு அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கொரோனா மாதிரிகளை சேகரிக்க உதவி செய்தனர்.

எனவே இவர்களுக்கு செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!