திருவள்ளூரில் 1560 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி

திருவள்ளூரில் 1560 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1560, டிஸ்சார்ஜ் 1205, சிகிச்சையில் 6958 என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1560, டிஸ்சார்ஜ் 1205, சிகிச்சையில் 6958 என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1560 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், இதுவரை 66, 644 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும், இன்று ஒரே நாளில் 1205 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 58, 838 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இன்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்ததால் இதுவரை 848 உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் 6958 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்