திருவள்ளூர்: இன்று 1231 பேருக்கு கொரோனா -16 பேர் பலி

திருவள்ளூர்: இன்று 1231 பேருக்கு கொரோனா -16 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1231, டிஸ்சார்ஜ் 618, இறப்பு 16, சிகிச்சை 12,630 என சுகாதாரத் துறையினர் தகவல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, ஒரே நாளில் 1231 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 93,674 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 618 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 79, 846 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத்துறையினர், இன்று 16 நபர்கள் உயிரிழந்து இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1198 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் 12,630 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story