திருவள்ளூரில் 1384 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
![திருவள்ளூரில் 1384 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி திருவள்ளூரில் 1384 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி](https://www.nativenews.in/h-upload/2021/05/07/1046623-images-55.webp)
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று ஒரேநாளில் 1384 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 68, 121 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 1246 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர்.,
இதுவரை 60, 084 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத் துறையினர், இன்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்ததால் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 863 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 7174 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu