திருவள்ளூர் மாவட்டத்தில் 1251 பேருக்கு கொரோனா, 22 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில்  1251 பேருக்கு கொரோனா, 22 பேர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் 1251 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 22 பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 1251 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று 1133 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 7999 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,000 ஆக உள்ளது, இதில் 67,037 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 964 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!