திருவள்ளூரில் காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா

திருவள்ளூரில் காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா
X

பயிற்சி நிறைவு விழாவில் அணிவகுப்பில் ஈடுபட்ட போலீசார்.

Police Physical Training -திருவள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

Police Physical Training -தற்காலிக காவலர்கள் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றுவந்த 183 ஆண் காவலர். நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த 435 பெண் காவலர்கள் என மொத்தம் 618 காவலர்கள் பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த 183 காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

விழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி பள்ளி முதல்வருமான சீபாஸ் கல்யாண் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அனுமந்தன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குச் சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

பயிற்சி முடித்து காவல் பணியில் ஈடுபட போகும் உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை பார்க்கும்போது எனது பயிற்சி காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது . இப்போது உங்களது குடும்பத்தினர் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

இந்தப் பயிற்சி காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். நானும் பொறியியல் பட்டதாரி தற்போது காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ளேன் அதேபோல் தற்போது இந்த பயிற்சியில் 183 பொறியாளர்கள் காவல் பயிற்சி பெற்றுள்ளீர்கள் நீங்கள் இத்துறையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேறுங்கள். தற்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். பணியின் போது, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் வீர சாகச, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

முடிவில் காவலர் பயிற்சி பள்ளியின் முதன்மைச் சட்ட போதகர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பயிற்சி காவலர்களின் உறவினர்கள் பெற்றோர்கள் தாராளமானார் கலந்து கொண்டனர் இதேபோல் திருவள்ளூர் அருகே உள்ள கனகவல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளியில் பெண்கள் பிரிவில் பயிற்சி பெற்று வந்த 435 பெண் காவலர்கள் நிறைவு விழா நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 618 பயிற்சி பெற்று வந்த காவலர்களுக்கு பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா நடைபேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story