பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், செய்தியாளர்களை சந்தித்தார். 

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த பாஜக அதனை நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து 27, 28 தேதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. நாளை கடலில் இறங்கியும், நாளை மறுநாள் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டியும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் பாதிக்கப்படுவது கடந்த 10ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது எனவும், மீனவர்களின் படகுகளும், வலைகளும் சேதப்படுத்தி, மீனவர்களை சித்திரவதைப்படுத்தி சிறையில் அடைப்பது கடந்த 10ஆண்டுகளாக தொடர் கதையாகி வரும் நிலையில் இதில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கடந்த 10ஆண்டுகளில் கடல் தாமரை என்ற அமைப்பை உருவாக்கி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 27, 28 தேதிகளில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ளது.

மீனவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், 27ஆம் தேதி கடலில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாகவும், 28-ம் தேதி பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளது.

தேத்தலுக்காக நடத்தப்படும் போராட்டம் கிடையாது. தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும் போராட்டம் நடத்த உள்ளோம். இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. . பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சிக்கு தனித்துவம் உள்ளது எனவும், ஒரு சிலரால் அழிந்து போகும் என்பது ஏற்கத்தக்கதல்ல. எந்த பாதிப்பும் இல்லை.

தேர்தல் கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கடந்த முறை போட்டியிட்ட 9 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை பெற தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் 40 தொகுதிகளையும் வெல்வோம் என கூறி வருவது இயல்பு தான், பாஜகவை தமிழ்நாடு மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். பாஜக தமிழ்நாட்டில் நிராகரிக்கப்படும். தற்போது உள்ள 4 எம்எல்ஏக்கள் கூட அதிமுக கூட்டணியால் கிடைத்தது என அவர் தெரிவித்தார்.


Next Story
ai and future cities