எஸ்பிஐ வங்கியைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Congress Agitation At Tiruvallur
திருவள்ளூரில் ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களை பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகும் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி திருவள்ளூர் நகரத் தலைவர் பிரேம் ஜோஷி ஆனந்த் ஏற்பாட்டில்100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திருவள்ளூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான
துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியை கண்டித்தும்,கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் எஸ்பிஐ வங்கியை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அஸ்வின் குமார் தளபதி மூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu