பாலவாக்கம் ஏரியில் விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுக்கப்படுவதாக புகார்

பாலவாக்கம் ஏரியில் விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுக்கப்படுவதாக புகார்
X

பாலவாக்கம் ஏரியில் சவுடுமணல் எடுக்கப்படும் காட்சி.

ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஏரியில் விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறி உள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஏரியில் சாலை பணிகளுக்காக அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாலவாக்கம் ஏரியில் தற்போது தச்சூர் முதல் சித்தூர் வரை 126.550 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை-பெங்களூர் அதிவேக 6 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக ஆந்திராவில் 75 கிலோமீட்டர்,தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில்51.550 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டு வரும் என்எச் 716.பி என இரு சாலைகள் ரூபாய்.3,197 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பணிகளுக்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகளில் சவுடு மண் தனியார் நிறுவனங்களுக்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் ஏரியை சுற்றி சுமார் 1500 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர், கரும்பு,பூக்கள், கீரை, காய்கனி வகைகளை பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலங்களுக்கு அருகாமையில் ஏரி ஒன்று அமைந்துள்ளது.இந்த ஏரியில் சாலை பணிகளுக்காக தனியார் நிர்வாகத்திற்கு1மீட்டர் ஆழத்திற்கு மட்டும்தான் மண் எடுக்க வேண்டும் என விதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தி சற்று கூட பொருட்படுத்தாமல் அனுமதி பெற்றுள்ள தனியார் நிறுவனம் சுமார் 5 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டி நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுத்துச் செல்கின்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் இந்த ஏரியை சுற்றி ஆயிரக்கணக்கான விளைநிலங்களில் பருவத்திற்கு ஏற்ப விவசாயம் செய்து வருவதாகவும்,ஏரியில் குறைந்த அளவிற்கு மண் எடுப்பதால் மழை நீர் தேங்கி அந்தத் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தோம், 5.க்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்களை வைத்து அதிக அளவில் சவுடு மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும், இது மட்டுமல்லாமல் அருகில் அரசு பள்ளியும், செயல்பட்டு வருவதாகவும், அதிக அளவில் பள்ளம் தோண்டி மண் எடுப்பதால் தாங்கள் வளர்க்கின்ற செல்லப்பிராணிகளான மாடுகள் ஆடுகள் உள்ளிட்டவை மேய்ச்சலுக்கு செல்கிறபோது பள்ளத்தில் விழுந்து உயிர் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

இது குறித்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் அதிக அளவில் எடுக்கும் சவுடு மண் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனால் அரசுக்கு கோடி கணக்கில் இழப்பீடு ஏற்படும் எனவும் இதனை கனிமவளத்துறை அதிகாரிகள் பாலவாக்கம் ஏறியினை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது