மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய மருமகன் மீது நடவடிக்கை கோரி புகார்

மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய மருமகன் மீது நடவடிக்கை கோரி புகார்
X

தீ வைத்து எரிக்கப்பட்ட வீடு.

Complaint Letter in Tamil - திருவள்ளூர் அருகே மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய மருமகன் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Complaint Letter in Tamil - திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு புதிய சம்பத் நகரைச் சேர்ந்தவர் வேம்புலி. இவர் தனது கணவர் சந்திராச்சாரி இறந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.வேம்புலியின் மூன்றாவது மகள் கல்பனா திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பட்டறை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கல்பனாவின் கணவர் குடி போதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . சரவணன் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 11ம் தேதி ஆட்டோ ஓட்டுவதற்கு முன் தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி மனைவி கல்பனாவை அடித்து துன்புறுத்தியதுடன் ஈக்காடு புதிய சம்பத்நகர் பகுதியில் வசிக்கும் கல்பனாவின் தாய் வேம்புலியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ரவுடி சரவணன் மீது காவல்துறையினர் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வேம்புலியின் வீட்டு அருகே குடியிருந்த ஷோபனா என்பவரது வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் வீட்டினை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி வீட்டில் இருந்த 4சவரன் தங்க நகை மற்றும் 43 இன்ச் எல் இ டி டிவியை திருடி சென்றுள்ளார், இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை வேம்புலி வீட்டினை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுடன் மின்சாதன பொருட்களையும் தீவைத்து எரித்துள்ளார் பின்னர் வீட்டில் அருகிருந்தவர்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

எனவே 2 வீடுகளை பெட்ரோல் ஊற்றி எரித்து மாமியார் வேம்புலியையும் கத்தியால் வெட்டிய மருமகன் சரவணன் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
why is ai important to the future