தாயை அனாதையாக தவிக்க விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார்

புகார் மனு அளிக்க வந்த பெண்ணிடம் கருணையுடன் விசாரணை நடத்திய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.
சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கி அனாதையாக தவிக்க விட்ட மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் ம.பொ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள் வயது (65).இவர்களுக்கு மகேஷ்பாபு என்ற மகனும் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி என மூன்று மகள்களும் உள்ளனர்.
இவர்கள் 4 பேருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் மூதாட்டி முனியம்மாளுக்கு இடுப்பு பகுதி செயலிழந்து நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் முனியம்மாளின் கணவர் கடந்த 2012 -ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து முனியம்மாளின் மகன் மகேஷ்பாபு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில் அவர் உடன் பிறந்த சகோதரிகள் இருவருக்கும் எந்த பங்கும் தராமலும், தற்போது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படும் தாயும் கண்டுகொள்ளாமல், அனாதையாக தவிக்க விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.பின்னர் மகன் மீது மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ் சந்தித்து புகார் மனு அளித்ததின் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.அப்போது மூதாட்டி முனியம்மாள் தனது மகன் தன்னை ஏமாற்றி அனாதியாக தவிக்க விட்டு இருப்பதாகவும்,சொத்து பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என புகார் அளித்தார்.
இந்த விசாரணை மேற்கொண்ட ஆர்.டி.ஓ. ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருப்பதாக அறிவுறுத்தியதால் இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் முனியம்மாள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சந்திப்பதற்காக 108ஆம்புலன்ஸ் மூலம் படுத்த படுக்கையாக வருகை தந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை 108 ஆம்புலன்ஸ்மூலம் மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அந்த முதியோரை அனுப்பி வைத்தார் .உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தாய் சொத்தை ஏமாற்றி அனாதையாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி படுத்த படுக்கையாக ஆம்புலன்ஸ் மூலமாக வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu