/* */

பெரியபாளையத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்

பெரியபாளையத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணியை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணி துவக்கம்
X

பெரிய பாளையத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான  நிலம் அளவீடு செய்யும் பணியை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 1லட்சம் ஏக்கர் அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான 90சென்ட் நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணிக்காக ஒரு லட்சத்து ஓராவது ஏக்கர் அளவீடு செய்யும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து அளவீட்டு எல்லைக் கல்லைநட்டு வைத்தார்.

தொடர்ந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நிறைவையொட்டி இந்த பணியில் ஈடுபட்ட 172 நில அளவர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக வருவாய்த்துறையில் இருந்து வட்டாட்சியர்களை பணியமர்த்தி ஆண்டுக்கு 10கோடி ரூபாய் ஊதியம் வழங்கி பணிகள் நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறைக்கு சொந்தமான 3924கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில் நிலங்கள் கண்டறியப்பட்டு, இதுவரை 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்படும். 172 நில அளவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த 130 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும். அனைத்து கோயில்களுக்கும் வெப்-சைட் உருவாக்கப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த தகவல்களை அவற்றின் மூலம் தெரிந்து கொள்ளளலாம். திருப்பணிகள் ஆரம்பித்து 18ஆண்டுகள் கடந்த திருவட்டாறு கோவிலில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னரே குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய ரூ. 100 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆய்வு செய்த போது 12ஆண்டுகளாக தங்கதேர் ஓடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சீரமைத்து 6மாத காலத்திற்குள் தணிகை மலையை சுற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 365 படிகளை இணைக்கும் இடத்தில் கற்கள் போதிய அளவில் தரமில்லாததால் கல் அமைக்கும் பணிகள் தாமதமடைந்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றப்பாதை ஏற்பாடு செய்யப்படும். வனத்துறை ஒப்புதலுடன் யானை வளர்த்து வருபவர்கள் கோயிலுக்கு கொடுக்கலாம். அந்த யானையை அறநிலையத்துறை பராமரிக்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாராட்டு விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 172 நில அளவர்களுக்கு 26000ரூபாய் ஊதியமாக வழங்கி வரும் நிலையில் 2000ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் பிப்ரவரி மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என அப்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி, சத்திய வேலு, பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பரம்பரை அலங்காரம் குழு தலைவர் லோகமித்ரா, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மற்றும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்,கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி. ராமமூர்த்தி, பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ், சிறுவாபுரி முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், மட்டும் வெங்கட், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட பிரதிநிதி வி.பி. ரவிக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 10:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்