திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு
X

உயிரிழந்த நீதி தேவன்.

College student killed in train mishap near Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரியை முடித்துவிட்டு ரயிலில் நீதிதேவன் வீட்டிற்கு திரும்பினார்,

வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தனது கல்லூரி நண்பரும் நீதிதேவனும் பிளாட்பார்மில் இறங்கியுள்ளனர், பின்னர் இருவரும் ரயிலில் ஏற தனது நண்பன் ரயிலில் ஏறி விட்டாரா என்பதை பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தபொழுது நீதிதேவனின் கால் ரயிலுக்கு அடியில் சிக்கியதில் நீதிதேவன் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

பின்னர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நீதிதேவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!