பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம்,துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பயணத்திற்காக காத்திருக்கும் பயணிகள், வியாபாரிகள், பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களிடையே கொரோனா நோய்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் முக கவசங்களையும் வழங்கி நோய் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே எவ்வித நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டப்பட்டு மையம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. அதன்படி இன்றிலிருந்து மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தற்போது திருவள்ளூர் மாவட்டம் மற்றும் மற்ற மாவட்டங்கள் போல் தாெற்று அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு நாள்தோறும் 30 அல்லது 40 எண்ணிக்கையில் தோற்று பாதித்தவர்கள் இருந்து தற்போது நாள் தோறும் 100 க்கு மேலாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக மாவட்ட மற்றும் தாலுகா அளவில் குழுக்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். மேலும் தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 84 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 55% இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் உடனடியாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக முதல் தவணைத் தடுப்பூசியும் செலுதது கொள்ளுமாறு எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆபத்தான சூழ்நிலை ஏதும் இல்லை என்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை மருத்துவர் மருந்து வசதி உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளதாகவும் இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம் ஊர் இடங்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்று தகவல் அனைத்தும் பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும் முக கவசம் அணியாதவர்கள் விடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று உணர்வு நமக்குள்ளே ஏற்படுத்தும் விதமாகவும் பொதுமக்களிடையே முகக் கவசம் குறித்த முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் முக கவசத்தின் அவசியத்தை உணர்ந்து முறையாக முகக் கவசங்களை அணிந்து செல்லவும் வீடு திரும்பிய பின்னர் கைகளை கிருமி நாசினி அல்லது சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுத்தமாகவும் சமூக அக்கறையுடன் பொதுமக்கள் பொது இடங்களில் கடைப்பிடித்து பரவல் கட்டுப்படுத்தும். மேலும் அரசு கூறும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன கொரோனா சிறப்பு அறைகளை குறித்தும் தொடரின் சிகிச்சைகளை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று தொடர்பாக தகவலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஸ்ரீ வத்சன், துணை இயக்குனர் ஜவஹர்லால் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொற்று நோய் மாவட்ட திட்ட அலுவலர் சைதன்யா, சுகாதார அலுவலர் கோவிந்தராஜன் மருத்துவர்கள் செவிலியர்கள் என பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu