திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு
X
திருவள்ளூர் அருகே புட்லூரில் உறவினர் வீட்டிற்கு வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார வண்டியில் புட்லூர் ரயில் நிலையம் அருகில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விபத்தில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் பகுதியில் உள்ள குலாம் நதி என்ற ஊராட்சியில் வசித்து வருபவர் அன்பழகன். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகள் பெயர் மகாலட்சுமி 9.ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது சகோதரர் பிரசாந்த் 8.ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் விடுமுறை விட்டிருப்பதால் விடுமுறையை கழிக்க இவர்கள் திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மாணவர்களின் சித்தப்பா வீட்டிற்கு வந்திருந்தனர்.

பின்னர் நேற்று இரவு விரைவு ரயில் பிடித்து பழனி செல்வதற்காக புட்லூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய விரைவு ரயிலில் விபத்தில் எதிர்பாராத விதமாக மகாலட்சுமி சிக்கி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் இருப்புப் பாதை காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக விபத்தில் சிக்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புட்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்