திருமாவளவன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

திருமாவளவன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
X

திருமாவளவன் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிரம் அணிவித்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 62 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 62 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கும் நிகழ்ச்சியில் திருமாவளவன் வீடியோ கால் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.


சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின். தலைவருமான தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூண்டி ஒன்றிய செயலாளர் ராஜா ஏற்பாட்டில் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவ மனைகளில் பிறந்த 62 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் கலந்து கொண்டு இன்று திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 62 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது திருமாவளவன் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு தன்னுடைய பிறந்தநாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு இளம்தென்றல், அறிவுமதி என பெயர் சூட்டினார். இதனால் பொற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!