திருவள்ளூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

திருவள்ளூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
X

திருவள்ளூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில்  கண்பார்வையற்ற பெண்ணுக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.

திருவள்ளூரில் நடைபெற்ற மக்களுடன் சிறப்பு முகாமில் சட்டமன்ற உறுப்பினர் வஜி ராஜேந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட 10 முதல் 18 வரை உள்ள 9 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை, நகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்பு திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இதில் கண்பார்வையற்ற பெண் ஒருவர் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 3 பேர் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். அரை மணி நேரத்தில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழையை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் நகராட்சி அலுவலர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!