இந்தியா கூட்டணி தேர்தல் வரை தாக்கு பிடிக்காது ; மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்னையில் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியின் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Cetral State Minister Interview
பேச்சுவார்த்தைக்கு கூட தாக்கு பிடிக்காத நிலையில் இந்தியா கூட்டணி உடைந்துள்ளது எனவும்,நாடாளுமன்ற தேர்தல் வரை கூட இந்தியா கூட்டணி தாங்காது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மவார்பாளையம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
என் மண் என் மக்கள் நடைபாதை யாத்திரை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்ற முடிந்துள்ளது, மக்கள் ஆரவாரத்துடன் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும்,தேர்தலுக்காக முன் ஏற்பாடாக பாராளுமன்ற நிர்வாகிகளின் கூட்டம் தற்பொழுது தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
மேலும்அவர் பேசுகையில்,எப்பொழுதெல்லாம் இலங்கை கடற்படையினால் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ உடனடியாக அவர்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொண்டு வருவதுடன் படகுகளையும் துரிதமாக மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது .திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்வியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சியை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பணியை பாஜக செய்து வருகிறது ,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கூட கையாளும் ஆளுமை திமுக அரசுக்கு இல்லை என தெரிவித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை எதற்காக அவசர அவசரமாக மூடுகிறார்கள் என்பது கூட பொது மக்களுக்கு தெரியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.இந்தியா கூட்டணி உடைந்து போகக்கூடிய கூட்டணி எனவும், தேர்தல் வரை கூட அந்த கூட்டணி தாங்காது தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு கூட தற்பொழுது இந்தியா கூட்டணியால் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது, இந்தி கூட்டணி மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத கூட்டணி என்பதை கூட்டணியில் இருந்த கட்சிகள் புரிந்து கொண்டு உள்ளதால் அந்த கூட்டணி தற்பொழுது உடைந்துள்ளது என தெரிவித்தார்.
பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் எனவும் எய்ம்ஸ் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடையே ட்ராமா செய்து வருகிறார், மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் மக்களை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu