துணிக் கடை முன்பு நின்ற டூவீலர் திருடப்பட்ட சிசிடிவி காட்சி; போலீசார் விசாரணை
திருவள்ளூரில் துணிக்கடை முன்பு நின்ற டூவீலரை, திருடிச் செல்லும் ‘டிப்டாப்’ திருடனின் சிசி டிவி காட்சிகள்.
Crime News in Tamil -திருவள்ளூர் தேரடி பகுதியில், இயங்கி வரும் 'யாஸ்மின் சில்க் ஹவுஸ்' துணிக்கடையில், நம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருள், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டி.என் 20 டிஏ554 என்ற பதிவுஎண் கொண்ட பல்சர் பைக்கில் வந்து, புத்தாடை வாங்குவதற்காக, துணிக்கடையின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்குள் சென்றுள்ளார்.
பின்னர் புத்தாடைகளை வாங்கிக்கொண்டு வெளியே வந்து பார்த்த, அருள் தனது பைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து தனது பைக்கை, துணிக்கடை அருகே தேடியும் கிடைக்காததால் துணிக்கடையில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, கருப்பு நிற பேண்ட், சிவப்பு நிற சட்டை அணிந்து 'டிப்டாப்' ஆக வந்த வாலிபர் ஒருவர், பைக்கை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தனது வாகனம் திருடு போன சம்பவம் குறித்து, அருள் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் நகர போலீசார், 'டிப்டாப்' திருடன் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருவள்ளூரில் மையப்பகுதியாக திகழும் மக்கள் அதிகம் கூடும் பகுதியான திருவள்ளூர் தேரடியில் அமைந்துள்ள துணிக்கடையில் அருகே பைக் திருடு போன சம்பவம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன், அரசு பொது மருத்துவமனை, ஆயில் மில், காமராஜர் சிலை, உழவர் சந்தை பஸ் ஸ்டாண்ட் மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து, ஏராளமான இருசக்கர வாகனங்கள் இது போல் திருடப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், போலீசார் பற்றாக்குறையால் இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து பல முறை நடைபெறுவதாகவும் எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், திருவள்ளூர் மாவட்டத்தில், கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பில் ஈடுபடுத்தவும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu