திருவளளூர் அருகே மஞ்சங்காரணையில் கேரம் போர்டு விளையாட்டு போட்டி
திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்காரணையில் கேரம்போர்டு விளையாட்டு போட்டி துவக்கி வைக்கப்பட்டது.
மஞ்சங்காரணையில் நடைபெற்ற மாபெரும் ஒரு நாள் இருவர் கேரம் போர்டு விளையாட்டு போட்டியை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் ஒரு நாள் இருவர் தள்ளாட்டப்போட்டி எனப்படும் கேரம் போர்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணையில் உள்ள சமுதாய கூட வளாகத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் 40 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில்,முதல் பரிசை புழல் அணி பெற்று ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை தட்டிச சென்றது .2-ம் பரிசை கன்னிகைப்பேர் அணி ரூ.7 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார்.தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி,மாநில அயலக அணி துணைச் செயலாளர் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ்,மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்போட்டியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.ராஜேஷ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜே.வீரமணிகண்டன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆர்.கே.தினகரன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.விஜய்,மாவட்டத் துணை அமைப்பாளர் எஸ்.பிரேம்ராஜ், சி.மணிவாசகம் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் ஏ.தேவேந்திரன்,டி.கே.முனிவேல், ஆர்.உதயசூரியன்,ஈ.உதயசூரியன்,பி.ராஜேஸ்வரிபாஸ்கரன்,கே.எஸ்.குப்பன்,ஆர்.தணிகாசலம்,கே.கண்ணபிரான்,சி.தினேஷ்குமார், திருக்கண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் எம்.மதன்,ஷாம்கமலேஷ்,முரளி,கோபி, பி.சத்யா,மாவட்ட நிர்வாகிகள் எம்.துளசிராமன்,டி.பாபு, அக்கரை ஆர்.ரஞ்சித்,கே.நாராயணன்,ஜி.தியாகராஜன்,எம்.முனிநாதன்,எம்.கே.ஆனந்தன்,நீதி என்ற செல்வகுமார் மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளைக்கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில், பி.ஜெயசீமன்,கே.நாகராஜ்,பி.ரஜினி,வி.பிரேம்,து.அறிவழகன் ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னிகைப்பேர் இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.அன்பு சிறப்பாக செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu