கார் பழுது காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு! பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு இழப்பீடு ரூ 60,000!

சரியான முறையில் கார் பழுது பார்க்காமல் உரிமையாளரிடம் பணம் பெற்ற நிறுவனம் மீது வாடிக்கையாளர் தொடுத்த வழக்கின் காரணமாக நிறுவனம் இழப்பீடாக60 ஆயிரம் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.

திருவள்ளூரில் முறையான கார் பழுது நீக்கம் செய்யாமல் செயல்பட்ட கார் நிறுவனத்திற்கு அபராதம். நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொகையான 60 ஆயிரத்திற்கான காசோலை வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் ராஜ் இவருக்கு சொந்தமான எக்ஸ்யூ கார் பழுது நீக்கம் செய்வதற்காக திருவள்ளூர் சி.வி நாயுடு சாலையில் உள்ள பிரபல கார் பழுது நீக்கம் ஜி.கே டயர் ஜோன்மையத்தில் காரை விட்டுள்ளார்.

ஆனால் கார் முறையாக பழுது நீக்கம் செய்யாமலும் காரில் இருந்து கழற்றப்பட்ட பழைய உதிரி பாகங்கள் வாடிக்கையாளரிடம் காட்டவில்லையாம். கார் பழுது நீக்கம் செய்து விட்டதாக கூறி அதற்காக வாடிக்கையாளரிடம் ரூ. 1.5 லட்சம் பணம் கட்டணமாக பெற்றுக்கொண்டு அந்நிறுவனம் காரை ஒப்படைத்துள்ளது.

அதன் பின் வாகனத்தை ஓட்டிப் பார்த்த வாடிக்கையாளருக்கு வாகனம் முறையாக பழுதி நீக்கம் செய்யாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக அந்நிறுவனத்துக்கு சென்ற அவர் மீண்டும் அந்த நிறுவனத்திடம் முறையிட்டுள்ளர். ஆனால் அந்த நிறுவனம் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்காமல் அவரை அலைக் கழித்துள்ளது.

இந்த செயல் ரூபாய் 1.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த வாடிக்கையாளர் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. அதைத்தொடர்ந்து வேறொரு கார் பழுது நீக்கம் செய்யும் மையத்தில் கார் ஏற்பட்டுள்ள பழுது தொடர்பாக பிரச்சனைகளை குறித்து தகவலை சோதித்த பார்த்தபோது காரை சரியான முறையில் பழுது பார்க்கவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜி.கே.கார் ஜோன் நிறுவனம் மீது தனது வழக்கறிஞர் ஸ்டாலின் மூலமாக கடந்த 2018.ஆம் ஆண்டு காரின் வாடிக்கையாளர் திருவள்ளூர் நுகர்வோர் நீதி மன்றத்தில் இழப்பீடு வேண்டி வழக்கு தொடுத்து இருந்தார்.அதைத்தொடர்ந்து அவ்வழக்கை விசாரித்த திருவள்ளூர் நுகர்வோர் நீதி மன்ற தலைவர் லாதா மகேஷ்வரி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக 10 ஆயிரம் 30 நாட்களுக்குள் அளித்திட உத்தரவிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அந்த கார் நிறுவனம் நீதிமன்றம் கூறிய இழப்பீடு தொகையான ரூ.60 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!