கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
X

நீர்மட்டம் குறைந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கம்.

பூண்டி ஏரியில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக 35 அடியில் இருந்து 25 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு 35 அடியில் இருந்து 26 அடியாக சரிந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 35 அடியில் இருந்து தற்போது 26.50 அடி நீர் இருப்பு உள்ளது,

அதன் முழு கொள்ளளவான 3.231 டிஎம்சி நீரில், தற்போது 1.063 அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. குடிநீருக்காக சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 485 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது,

வெயில் காலம் துவங்குவதற்கு முன்பே முக்கிய அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், வரும் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் கோடை காலம் தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!