தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் எருமை திருவிழா

செங்குன்றம் அருகே உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற எருமை திருவிழா.
தமிழ்நாடு கால்நடை மருத்துவர் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த அலமாதியில் உள்ள உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரியில் எருமை திருவிழா நடைபெற்றது. இதில் எருமை பராமரிப்பு கருத்தரங்கம் பயிற்சி கண்காட்சி மற்றும் சிறந்த எருமைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.
மேலும் எருமைப்பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் இனிப்பு தயிர், பன்னீர் உரை வைக்கப்பட்ட பால் பொருட்கள் உணவு பதப்படுத்தலில் சூரிய ஒளியின் பங்கு, பால் பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்துதல் மற்றும் சுய தொழில் தொடங்குதல் குறித்த வழிகாட்டு முறைகள் இந்நிகழ்ச்சியில் ஊரகப் பெண்களுக்கு துறை வல்லுனர்களால் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது.
அறிவியல் முறையில் எருமை வளர்ப்பு வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்த எருமைகளுக்கான சிறப்பு பராமரிப்பு, எருமைகளின் இன விருத்தி, எருமைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் தீவனங்கள் நோய் தடுப்பு முறைகள் எருமை கன்றுகள் பராமரிப்பு ஆகிய தலைப்புகளில் கால்நடை மருத்துவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் ராஜஸ்தான் அரியானா மற்றும் பீகார் போன்ற வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை அனைத்து விதமான பருவநிலைகளில் எருமை மாடுகளை சிறந்த முறையில் பராமரிப்பது போன்று தமிழ்நாட்டில் நிலம் பருவநிலைக்கேற்ப எருமை மாடுகளை சிறந்த முறையில் பராமரித்து பால் உற்பத்தியை பெருக்கி தமிழக விவசாயிகள் பயன்பெறுமாறு வலியுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu