திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு மற்றும் கொள்ளையர்கள் தப்பி செல்லும் சி.சி.டி.வி. காட்சி.

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் உள்ளாடையுடன் தப்பி ஓடினர்.

திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் ஊராட்சி பல்லவன் திருநகரில் கடந்த 10 ஆண்டுகளாக ராஜேஷ் (37) தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்..

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு மாவட்டம் பிலாப்பூர் கிராமத்தில் பூர்வீக வீட்டிற்கு பொங்கல் அன்று காலை சென்ற நிலையில் இன்று தனது மனைவி ரேவதி (30)மாமனார் ஸ்ரீனிவாசன்(60) அம்மா கோகிலா (50). மற்றும் அவரது இரு குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்துள்ளார்

அப்போது வீட்டின் கேட் பூட்டப்பட்டும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் மாமனார் மற்றும் அம்மா உள்ளே சென்று பார்த்தபோது இருவர் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து திருடர்களை பிடிக்க முயன்றபோது மாமனார் சீனிவாசன் மற்றும் அம்மா கோகிலா ஆகிய இருவரையும் தாக்கிய திருடர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இருப்பினும் அவரது மாமனார் சீனிவாசன் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது திருடர்கள் லுங்கியை அவிழ்த்து விட்டுவிட்டு உள்ளாடையுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து மணவளநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருடர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு ஜட்டியுடன் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதி சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கீழ்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக 15க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும் திருட்டு சம்பவங்களை கண்காணிக்க ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட 6க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் உடைக்கப்பட்டது குறித்தும் பலமுறை புகார் அளித்தும் மணவாளநகர் காவல்துறையினர் இதுவரை உண்மையான குற்றவாளிகளை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைந்தபட்சம் சி.சி.டி.வி. யில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தாவது திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து ஊராட்சியை காப்பாற்ற வேண்டும் எனவும் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம். தேவதாஸ் கோரிக்கை விடுத்தா

Tags

Next Story
ai in future agriculture