மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா

திருவள்ளூர் அருகே ஆடியோ செட் அமைக்கும் பணிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அருகே ஆடியோ செட் அமைப்பதற்காக உதவிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த தண்ணீர் குளம் அடுத்த தண்டலம் பகுதி சேர்ந்தவர் தமிழ்வாணன் இவர் சொந்தமாக ரூபன் ஆடியோ வைத்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியில் உள்ள மகிமதி பார்ட்டி ஹாலுக்கு ஆடியோ செட் அமைத்துள்ளதால்.அந்த பார்ட்டி ஹாலில் இன்றைய தினம் தனியார் நிகழ்ச்சி நடைபெற இருந்ததால் அவரின் கீழ் பணியாற்றும் சதீஷ் அனுப்பி வைத்துள்ளார்.

சதீஷ் துணைக்காக அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி இடைநீற்றல் நின்ற 16 வயது சிறுவன் தீனாவை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆடியோ செட் அமைக்கும் பணி உதவி செய்து கொண்டிருந்த தீனாவை மின்சாரம் தாக்கி தூக்கி வீசி உயிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் அங்கு வந்த செவ்வாபேட்டை போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆடியோ செட் அமைப்பதற்காக உதவிக்குச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தண்டலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்