கன்னிகைப்பேரில் போலேரி அம்மன் ஜாத்திரை திருவிழா

கன்னிகைப்பேரில் போலேரி அம்மன் ஜாத்திரை திருவிழா
X

போலேரி அம்மன் ஜாத்திரை திருவிழா 

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு போலேரி அம்மன் ஜாத்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். கன்னிகைப்பேர் கிராமத்தில் போலேரி அம்மன் அம்மன் ஜாத்திர திருவிழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி அன்று தாடி கும்பம் படைத்தல், பத்தாம் தேதி கிராம எல்லையில் கிராம தேவதை செல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன்,பன்னீர்,ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து அம்மனுக்கு படையல் இட்டு புடவை வலிகள் உள்ளிட்டவை படைத்தும் தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 11- ஆம் தேதி அன்று கிராமத்தில் உள்ள சக்தி கல்லுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது. 12ஆம் தேதி 13-ஆம் தேதி மற்றும் 14-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு அலங்காரத்துடன் போலேரி அம்மன் கிரகத்திற்கு பூச்சூடி கன்னிகைப்பேர் கிராம பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் மேல, தாளங்கள் முழங்க ஊர்வலம் வந்த பொழுது அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் கிரகத்திற்கு தேங்காய் உடைத்து,கற்பூர ஆரத்தி எடுத்தும்,வழிபட்டனர்.

மாலை போலேரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கிராமத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் வந்தன. இதனைத் தொடர்ந்து இரவு தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னிகைப்பேர் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!