bjp state vice president interview திருவள்ளூரில் பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி
திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜ மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதர்.
bjp state vice president interview
திருவள்ளூரில் பாஜகமாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர்டால்பின் ஸ்ரீதர் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவிக்கும்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த வகையில் தமிழர்களுக்கு காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தாரோ அந்த வகையில் ஸ்டாலினும் அவர் வழித்தடத்தை பின்பற்றி வருவதாகவும்,இரண்டு வருடத்தில் மதுவிலக்குத்துறையில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகள் கூட்டம்மானது விளையாட்டு குழந்தைகள் கூட்டம் போல் நடைபெறுவதாகவும்,திமுக காவிரி பிரச்சினையில் தமிழர்களுக்கு தொடர்ந்து மிகப்பெரிய துரோகம் மட்டுமே செய்து வருகிறது என்றும்தெரிவித்தார்.
தமிழக அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு அமைச்சரா அல்லது மது ஊக்கப்படுத்த அமைச்சரா என்று கேள்வி எழுப்பிய அவர் இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கோடி அளவிற்கு மதுவிலக்குத் துறையில் ஊழல் நடைபெற்ற இருப்பதாக தெரிவித்தார்.தக்காளி விலை ஏற்ற விவகாரத்தில் மத்திய அரசு உதவ வேண்டும் என அமைச்சர் உதயநிதி அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்பதாகவும் - அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என தெரிவித்தார்,
இந்த சந்திப்பின்போது மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் குமார்
மாவட்ட பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் கருணாகரன்சீனிவாசன்,முன்னாள் எம்எல்ஏ அருள் சுப்பிரமணியம்
ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர்நாகராஜ், துணை தலைவர் விரேந்திர பாபு, மாவட்ட செயலாளர் குருமூர்த்தி,
மோகன் குமார்,மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu