வெண்பாக்கம் பகுதியில் பிஜேபி அலுவலகம் திறப்பு விழா

Bjp Party Office Inauguration
பொன்னேரியில் பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா உரிய அனுமதி பெறவில்லை என தேர்தல் அதிகாரிகள் வந்தபோது பாஜக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Bjp Party Office Inauguration
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேங்கடபுரம் பகுதியில் பாஜக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி இதில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பாஜக கட்சி கொடியுடன் கட்சி அலுவலகம் திறப்பு விழா குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாஜக நிர்வாகிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை என கேள்வி எழுப்பினர்.
அப்போது இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் நேற்று மனு கொடுத்ததாகவும் கட்சி அலுவலகத்திற்கு எதற்கு அனுமதி என பாஜக நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை கட்சி அலுவலகம் தான் திறக்கிறோம் எனக் கூறிய போது, கட்சி அலுவலகமாக இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் கட்சி கொடிகள் கட்டியும், பேனர்கள் வைத்து மைக் செட் போடப்பட்டு இருப்பதற்கு உரிய அனுமதி பெற்றீர்களா என தேர்தல் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது பாஜக நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Bjp Party Office Inauguration
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கலைந்து செல்வதாக பாஜக நிர்வாகிகள் கூறிவிட்டு அலுவலகத்தை பூட்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். உரிய அனுமதி பெறாமல் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடத்தியதாக தேர்தல் அதிகாரிகள் பாஜக நடத்திய நிகழ்வு இடத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசித்து சட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu